மேலும் செய்திகள்
குழிக்காட்டு தோட்டத்தில் இனி, பசுமை செழிக்கும்!
24-Sep-2024
ஊட்டி; ஊட்டி உல்லத்தி கிராமத்தில் நடந்த மரக்கன்று நடும் விழாவில், மாணவர்களுக்கு காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முன்னெடுப்பில், 'காலநிலை மாற்றம் மீட்டு எடுத்தல், பசுமை நீலகிரி 2024' என்ற திட்டத்தில் மாவட்டம் முழுவதும், ஒரு லட்சம் மரக்கன்று நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இதனை ஒட்டி, ஊட்டி அருகே உள்ள உல்லத்தி கிராம மக்கள், தங்கள் கிராமத்தில் நடுவதற்கு உண்டான இடத்தை தேர்வு செய்து, 'மரக்கன்று தேவை' என, வேண்டுகோள் விடுத்தனர். மாவட்ட வன அலுவலர் கவுதம் அறிவுரைப்படி, ஊட்டி வடக்கு வனச்சரகம் சார்பில், 1000 மரக்கன்றுகள், உல்லத்தி கிராம மக்களுக்கு வழங்கப்பட்டது. இவை, தன்னார்வலர்கள் மூலம், கிராமத்தில் சேர்க்கப்பட்டது.ஊர் தலைவர்கள் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் குண்டன், ஓய்வுபெற்ற ஆசிரியர் சுப்ரமணி ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில அரசின் பசுமை விருது பெற்ற ஓய்வுபெற்ற ஆசிரியர் ராஜூ, சிறப்பு விருந்தினராக பங்கேற்று மரம் நடும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, உல்லத்தி மற்றும் ஓடைக்காடு அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் ஷோபா முன்னிலையில், காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
24-Sep-2024