மேலும் செய்திகள்
வனப்பகுதியில் சென்னா மரங்கள் வெட்டி அகற்றம்
26-Nov-2026
குன்னுார்: குன்னுாரில் இரவில் பெய்த கன மழையால் மரங்கள் விழுந்தது. குன்னுார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த, 2 நாட்களாக இரவில் கனமழை பெய்தது. இன்று (நவ.,27) காலை காலை, 7:00 மணி வரையிலான, 24 மணி நேரத்தில், எடப்பள்ளியில், 74 மி.மீ; பர்லியாரில் 65 மி.மீ;குன்னுார், 41 மி.மீ; உலிக்கல்லில், 40 மி.மீ; குன்னுார் புறநகரில்,38 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. இதனால், மரப்பாலம் அருகே மரத்துடன் சேர்ந்து மண்சரிவு ஏற்பட்டது. அளக்கரை சாலையில் மரம் விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், சப்ளை டிப்போ அருகே அடுத்தடுத்து இரு மரங்கள் சாலையின் மறுத்தே சாய்ந்தன. தீயணைப்பு துறையினர் நெடுஞ்சாலை துறையினர் மற்றும் வனத்துறையினர், சாலையில் விழுந்த மரங்களையும், மண்சரிவையும் அகற்றினர். மரங்கள் விழுந்ததன் காரணமாக ஏற்பட்ட மின்தடையை, மின்வாரிய ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு பழுதுகளை சரிசெய்தனர்.
26-Nov-2026