உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஜீன்பூல் தாவரம் மையத்தில் மலையேற்றம்; ஆர்வத்துடன் வரும் சுற்றுலா பயணிகள்

ஜீன்பூல் தாவரம் மையத்தில் மலையேற்றம்; ஆர்வத்துடன் வரும் சுற்றுலா பயணிகள்

கூடலுார்; கூடலுார் ஜீன்பூல் தாவர மைய மலையேற்ற வழித்தடத்தில் மலையேற்றம் செல்ல சுற்றுலா பயணியர் ஆர்வம் காட்டுகின்றனர்.கூடலுார் ஜீன்பூல் தாவர மையம், ஊசிமலை (கரியன்சோலை) உள்ளிட்ட, 10 மலையேற்ற வழித்தடங்களில் சுற்றுலா பயணிகள் அழைத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதற்கான பணிகள் நவ., மாதம் துவங்கப்பட்டது. அதில், கூடலுார் நாடுகாணி ஜீன்பூல் சூழல் சுற்றுலா தாவரம் மையத்தில் உள்ள மலையேற்ற வழிதடத்தில் மலையேற்றம் சென்று வர சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இம்மையத்திலிருந்து, காலையில் புறப்படும் சுற்றுலா பயணிகள், பாண்டியார் -புன்னம்புழா ஆற்றில் உள்ள நீர் வீழ்ச்சி வரை, 8 கி.மீ., சென்று வருகின்றனர். நடந்து செல்லும் போது வனப்பகுதியில் தென்படும் வனவிலங்குகள், பறவைகள், தாவரங்கள் குறித்து, வன பாதுகாப்பின் முக்கியத்துவம் பற்றி சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை சுற்றுலா வழிகாட்டிகள் விளக்கி வருகின்றனர். மலையேற்றம் துவங்கிய சில மாதங்களில், இந்த வழிதடத்தில், 13 குழுக்களை சேர்ந்த 43 பேர் மலையேற்றம் சென்று வந்தனர்.இந்நிலையில், கோடை வறட்சி, வனத்தீ அச்சம் காரணமாக, பிப்., 20 முதல் ஏப்., 15 வரை சுற்றுலா பயணிகள் மலையேற்றம் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால், ஜூன்பூல் தாவரம் மைய வழித்தடத்தில் மலையேற்றம் செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.கோடை மழைக்குப் பின் வனப்பகுதி பசுமைக்கு மாறியதால், ஏப்., 20ம் தேதி முதல் மீண்டும் மலையேற்றம் துவங்கியது. வழக்கம்போல், ஜீன்பூல் தாவரம் மைய மலையேற்றம் செல்ல சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இவ்வழித்தடத்தில் கடந்த மாதம் வரை, 45 சுற்றுலா பயணிகள் மலையேற்றம் சென்று வந்தனர். பருவமழை தீவிரமடைந்த நிலையிலும், சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து மலையேற்றம் சென்று வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை