வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Well done. Congratulations to the young achiever
கோத்தகிரி; கீழ் கோத்தகிரி பள்ளி பழங்குடி மாணவி, புதிய பாரத எழுத்தறிவு திட்டத்திற்காக, பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற சென்றார். புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில், 2024-25 கல்வி ஆண்டிற்கான தன்னார்வலர்கள் சேர்க்கைக்காக, கடசோலை பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் மற்றும் ஹேரி உத்தம்சிங் ஆகியோர், கோத்தகிரி தேனாடு ஊராட்சிக்கு உட்பட்ட, கீழ் கட்டபெட்டு கிராமத்தில் சேர்க்கையில் ஈடுபட்டனர்.அப்போது, கீழ் கோத்தகிரி அரசு பள்ளியில் பிளஸ்-1 பயிலும், இருளர் பழங்குடியின மாணவி பார்த்தசாரதி, இந்த திட்டத்தில் இணைந்து, எழுத படிக்க தெரியாதவர்களுக்கு, சொல்லி தரும் பணியில் தன்னார்வலராக இணைந்தார்.மேலும், மத்திய அரசு நடத்திய 'விக்கித் பாரத்' திட்டத்தின் கீழ், பள்ளிகளுக்கு இடையே நடந்த கட்டுரை மற்றும் வினாடி-வினா போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார். மாநில அளவில் சென்னை லயோலா கல்லுாரியில் நடந்த போட்டிகளில் சாதித்து, தேசிய போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றார். இந்நிலையில், தமிழகத்தில் இருந்து, பள்ளி கல்லுாரிகளை சேர்ந்த, 44 பேர் கொண்ட குழு டில்லிக்கு சென்று, நாளை பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற சென்றனர். சாதித்த மாணவி, வெற்றிக்கு உறுதுணையாக செயல்பட்ட, பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கோபி ஆகியோரை, பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ் குமார், உதவி தலைமை ஆசிரியர் சந்திரன் உட்பட ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டி வழி அனுப்பி வைத்தனர்.
Well done. Congratulations to the young achiever