உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  சிம்ஸ் பூங்காவில் வசந்த காலத்தை வரவேற்கும் துலிப் மலர்கள்

 சிம்ஸ் பூங்காவில் வசந்த காலத்தை வரவேற்கும் துலிப் மலர்கள்

குன்னுார்: குன்னுார் சிம்ஸ் பூங்கா நர்சரியில் 'துலிப் மேக்னோலியா' மலர் நாற்றுகள் நடவு செய்வதற்காக, பணிகள் நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டம், சிம்ஸ் பூங்காவில், 'மேக்னோலியா' தாவர வகைகளில் சம்பக்கா, கிராண்டி புளோரா, லில்லி புளோரா, நீலகிரிக்கா, கேம்பெலி உள்ளிட்ட ரகங்களில், மரங்கள் உள்ளன. தற்போது, முதன் முறையாக, 'துலிப் மேக்னோலியா' வகை மலர்கள் நர்சரியில் தயார் செய்யப்பட்டுள்ளது. இவை சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக பூங்காவின் பல இடங்களிலும் நடவு செய்ய திட்டமிடப்பட்டள்ளது. பூங்கா மேலாளர் லட்சுமணன் கூறுகையில்,''சிம்ஸ் பூங்காவில் தற்போது துலிப் மேக்னோலியா வகை மலர்கள் வண்ண மயமாக நர்சரியில் தயார் செய்யப்பட்டுள்ளது. இவை பூங்காவின் பல்வேறு இடங்களிலும் நடவு செய்யப்பட்டு, முழுமையாக மலர்ந்தால், கோடை சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ