இரு காட்டெருமைகள் மோதல்; ராணுவ பகுதியில் மக்கள் அச்சம்
குன்னுார்; குன்னுார் பேரக்ஸ் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை முன்பு இரு காட்டெருமைகள் மோதி கொண்டன.குன்னுார் பகுதிகளில் காட்டெருமைகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றன. இந்நிலையில், நேற்று வெலிங்டன் பேரக்ஸ் ராணுவ மருத்துவமனை அருகே சாலையில் உலா வந்த இரு காட்டெருமைகள், வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை முன்பு திடீரென மோதி கொண்டன. அப்பகுதியில் இருந்தவர்கள், வாகனங்களை ஓட்டி வந்தவர்கள் அச்சமடைந்தனர். இந்த 'வீடியோ' வைரல் ஆகி உள்ளது. மக்கள் கூறுகையில், 'சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் காட்டெருமைகளை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.