உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / புலி தாக்கி இரு பசு மாடுகள் பலி

புலி தாக்கி இரு பசு மாடுகள் பலி

கூடலுார்: மசினகுடி பகுதியை சேர்ந்தவர் செலப்பாண்டி. இவர், தனது பசு மாடுகளை சிங்கார அருகே, தனியார் வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்பகுதிக்கு வந்த புலி இரண்டு மாடுகளை தாக்கி உள்ளது. இதனை பார்த்து அவர் சப்தமிட புலி அங்கிருந்து சென்றது. படுகாயம் அடைந்த இரண்டு பசு மாடுகள் உயிரிழந்தன. சிங்கார வனச்சரகர் விமல்குமார், வனவர் சங்கர் ஆய்வு செய்தனர். வாக்குவாத்தில் ஈடுபட்ட மக்களை வனத்துறையினர் சமாதானப்படுத்தினர். தானியங்கி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !