மேலும் செய்திகள்
அறிவியல் இயக்கம் சார்பில் கருத்தரங்கம்
19-Jan-2025
ஊட்டி; ஊட்டி ஜே.எஸ்.எஸ்., கல்லுாரியில், 'நியூரோஜெனெடிக்ஸ்' தொடர்பான இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு நடந்தது.புதுடில்லி நுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை, மைசூரு ஜே.எஸ்.எஸ்., உயர் கல்வி மற்றும்ஆராய்ச்சி அகாடமி அகியவை சார்பில் நடந்த கருத்தரங்கில், கல்லுாரி முதல்வர் டாக்டர் தனபால் வரவேற்றார். கருத்தரங்கு செயலாளர் கோமதி கருத்தரங்கின் நோக்கம் குறித்து விளக்கினார். சிறப்பு அழைப்பாளர்களால், மாநாடு குறித்த இதழ் வெளியிடப்பட்டது.கவுரவ விருந்தினர்களாக, டாக்டர் ரஞ்சித் சிங் அஜ்மானி, தலைமை நிர்வாக அதிகாரி ஏக்ரோஸ், டாக்டர் இமானுவேல், பேராசிரியர்பங்காரு ராஜன் ஆகியோர் பங்கேற்று பேசினர். 750 ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
19-Jan-2025