மேலும் செய்திகள்
நிதி உதவி கோரி பொதுமக்கள் போராட்டம்
02-Jan-2025
பந்தலுார், ; பந்தலுார் அருகே பிதர்காடு வனச்சரக எல்லைக்கு உட்பட்ட, பந்தபிலா குடியிருப்புகளை ஒட்டிய வாழை தோட்டத்தில், நேற்று காலை ஒற்றை யானை ஒன்று முகாமிட்டுள்ளது. இதனைப் பார்த்த மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் யானையை பொதுமக்கள் உதவியுடன், அருகில் உள்ள வனப்பகுதி வழியாக விரட்ட முயன்ற போது, யானை ஆற்றில் இறங்கி அருகில் உள்ள காபி தோட்டத்துக்கு சென்றது.தொடர்ந்து, கடலக்கொல்லி, புலியாடி கிராமங்கள் வழியாக குந்தலாடி பஜாருக்குள் காலை, 10:00- மணிக்கு வந்தது. வனத்துறையினர் யானை வருவதை ஒலிபெருக்கி மூலம் தெரிவித்து, யானையை விரட்டினர். அப்போது, ஓர்கடவு கிராமத்திற்குள் புகுந்து தேயிலை தோட்டம் வழியாக, தானிமூலா என்ற இடத்திற்கு வந்துள்ளது. அங்கு இலை பறித்து கொண்டிருந்த பார்வதி மற்றும் பழங்குடியின தொழிலாளி மாலு ஆகியோரை தாக்கிவிட்டு அங்கிருந்து ஓடியது. காயமடைந்த இருவரையும் வனத்துறையை சேர்ந்த, மணி, பிரபு, ரதீஷ்,சூர்யா ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். வனச்சரகர் சஞ்சீவி, வனவர்கள் பாலகிருஷ்ணன், பெலிக்ஸ், சுதீர், வி.ஏ.ஓ. சண்முகம் ஆகியோர் விசாரணை செய்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின், இருவரும் ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
02-Jan-2025