உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஆபத்தான நிலையில் நிழல்குடை; காத்திருக்கும் பயணிகள் அதிருப்தி

ஆபத்தான நிலையில் நிழல்குடை; காத்திருக்கும் பயணிகள் அதிருப்தி

கூடலுார்; 'கூடலுார் தேவர்சோலை பாடந்துறை அருகே, சேதமடைந்து வரும் நிழல் குடையை அகற்றி விட்டு, புதிய நிழல் குடை அமைக்க வேண்டும்,' என, வலியுறுத்தியுள்ளனர். கூடலுார் தேவர்சோலை சாலை, பாடந்துறை சர்க்கார்மூலா பகுதியில், பயணிகள் காத்திருக்க நிழல் குடை அமைத்துள்ளனர். பொதுமக்கள், மாணவர்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, நிழல் குடையின் மேற்கூரையில் வெடிப்புகள் ஏற்பட்டு, சில இடங்களில் சிமென்ட் பூச்சு பெயர்ந்தும் விழுந்துள்ளது. தற்போது பெய்து வரும் மழையில், மேற்கூரையில் மழைநீர் கசிவு ஏற்பட்டுள்ளதால், நிழல் குடை ஆபத்தான நிலையில் உள்ளது. எனினும், பயணிகள் வேறு வழியின்றி அச்சத்துடன் அந்த நிழல் குடையில் காத்திருந்து பஸ் ஏறி செல்லும் செல்கின்றனர். பயணிகள் கூறுகையில், 'இப்பகுதியில், பயணிகள் பஸ்சுக்கு காத்திருக்க, இந்த நிழல் குடையை தவிர, வேறு வசதியில்லை. நிழல் குடை சேதமடைந்து, வருவதால் அதனுள் காத்திருக்க அச்சம் ஏற்பட்டுள்ளது. சேதமடைந்து வரும், இதனை தேவர்சோலை பேரூராட்சி நிர்வாகம் அகற்றி விட்டு புதிய நிழல் குடை அமைக்க வேண்டும்,'என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ