ரப்பர் வாரியத்துடன் உபாசி ஒப்பந்தம்; தொழில் மேம்பட வாய்ப்பு
குன்னுார் : குன்னுாரில், ரப்பர் தொழில்துறை தேவை மற்றும் ஆராய்ச்சிக்காக, ரப்பர் வாரியம் மற்றும் உபாசி புரிந்துணர்வு ஒப்பந்தம் நடந்தது.குன்னுாரில் தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்க மாநாட்டில், உபாசி பொது செயலாளர் சஞ்சித், ரப்பர் வாரிய நிர்வாக இயக்குனர் ஆகியோர் தொழில்துறை தேவை மற்றும் ஆராய்ச்சிக்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.இதன் வாயிலாக, 'இந்திய ரப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தின் ரப்பர் தொழில்துறையின் தேவை, பயிற்சியை எளிதாக்குவது; தொழில் துறையின் தேவைக்கு ஏற்ப, அதிக மகசூல் தரும் தட்பவெப்ப நிலைக்குத் தகுந்த அதிக மர உள்ளடக்கம் கொண்ட குளோன்கள் பற்றிய ஆராய்ச்சி; விளைச்சல் மற்றும் உற்பத்தித்திறன் அதிகரிப்பு; தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது; இயந்திரமயமாக்கல்,' உள்ளிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.