உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டியில் வாஜ்பாய் பிறந்தநாள் விழா

ஊட்டியில் வாஜ்பாய் பிறந்தநாள் விழா

ஊட்டி; ஊட்டி நகர பா.ஜ., சார்பில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின், 100வது பிறந்த தினத்தை முன்னிட்டு, மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமையில், மண்டல தலைவர் பிரவீன் முன்னிலையில் விழா நடந்தது. அதில், வாஜ்பாய் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளர் தர்மன், பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் நித்தின் சேகர், நகர பொருளாளர் சுரேஷ் குமார், நகர துணை தலைவர் ஹரி கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !