உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பிடிபட்ட சிறுத்தை வண்டலூர் பயணம்

பிடிபட்ட சிறுத்தை வண்டலூர் பயணம்

பந்தலுார்;பந்தலூரில் மனிதர்களை தாக்கி வந்த சிறுத்தை நேற்று மாலை பிடிக்கப்பட்டது. பொதுவாக கூண்டில் வளர்ப்பு கால்நடைகளை வைத்து சிறுத்தை பிடிக்கப்படுவது வழக்கம். இந்த சிறுத்தை அதற்கு உடன்படாத நிலையில் முதல் முறையாக மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.பிடிக்கப்பட்ட சிறுத்தை முதுமலை கொண்டு செல்லப்பட்ட நிலையில் தொரப்பள்ளி சோதனை சாவடி அருகே, சிறுத்தையை முதுமலை புலிகள் காப்பகத்தில் விட எதிர்ப்பு தெரிவித்து எம்.எல்.ஏ. ஜெயசீலன் , ஸ்ரீ மதுரை ஊராட்சி தலைவர் சுனில் தலைமையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். முதுமலை புலிகள் காப்பகத்தில் வைத்து சிறுத்தைக்கு சிகிச்சை அளித்த பின், வண்டலூர் கொண்டு செல்லப்படும் என, வனத்துறையினர் உறுதி யளித்தனர்,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ