உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அமித்ஷாவை கண்டித்து வி.சி.க., ரயில் மறியல்

அமித்ஷாவை கண்டித்து வி.சி.க., ரயில் மறியல்

ஊட்டி; மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பார்லிமென்டில் அம்பேத்கர் குறித்து, பேசிய விவகாரம் சர்ச்சையாக மாறி உள்ளது. அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, ஊட்டி ரயில் நிலையத்தில், வி.சி.க.,வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், கட்சியின் மாவட்ட செயலாளர் துரை புவனேஸ்வரன்; முன்னாள் மாவட்ட செயலாளர் சகாதேவன் ஆகியோர் அமித்ஷாவை பதவி விலக வலியுறுத்தி, கோஷம் எழுப்பி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.ஊட்டி ஏ.டி.எஸ்.பி., நவீன் குமார் தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தி, ஊட்டி நகர செயலாளர் தம்பி இஸ்மாயில், தொகுதி செயலாளர் கட்டாரி மற்றும் மாவட்ட துணை செயலாளர் மோகன் குமார் உட்பட, 32 பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ