உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குற்ற சம்பவங்களை தடுக்க குன்னுாரில் வாகன சோதனை

குற்ற சம்பவங்களை தடுக்க குன்னுாரில் வாகன சோதனை

குன்னுார்; குன்னுார் பகுதிகளில், குற்ற சம்பவங்கள் நிகழ்வதை தடுக்க போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும், ஆயுதங்களுடன் சென்று திருட்டு உட்பட பல்வேறு குற்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக, திடீர் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. நீலகிரி மாவட்ட எஸ்.பி., நிஷா உத்தரவின் பேரில், குன்னுார் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். போலீசார் கூறுகையில்,'வார இறுதி நாட்களில் இது போன்ற சோதனை பணிகள் நடக்கும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி