சாலை அமைக்காததால் வாகனங்கள் சென்றுவர சிரமம்
கோத்தகிரி ; கோத்தகிரி தாலுகா அலுவலக சாலை, சீரமைக்காததால் வாகனங்கள் சென்று வருவதில் இடையூறு ஏற்படுகிறது.கோத்தகிரி தாலுகா அலுவலகம் செங்குத்தான சாலையில், ஜல் ஜீவன் திட்டத்தில், குழாய்கள் பதிப்பதற்காக, ஒரு மாதத்திற்கு முன்பு, குழி தோண்டப்பட்டது. பணிகள் நிறைவடைந்த நிலையில், சாலை அமைக்கப்படாமல் உள்ளது.இதனால், வெயில் நாட்களில் புழுதி ஏற்படுவதுடன், வாகனங்கள் சென்று வருவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. குறுகலான இச்சாலையில், தாலுகா அலுவலகம், நீதிமன்றம், தொலைபேசி நிலையம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உட்பட, அரசு அலுவலகங்கள் உள்ளன. மக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படுகிறது. தவிர வாகனங்களின் இயக்கமும் அதிகமாக உள்ளது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.