உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலையில் இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்

சாலையில் இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்

ஊட்டி; தலைக்குந்தா -ஊட்டி வரை சாலையில் இரு புறம் நிறுத்தப்படும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.ஊட்டி தலைக்குந்தா சாலை தேசிய நெடுஞ்சாலை கட்டுப்பாட்டில் உள்ளது. இச்சாலையில் அரசு பஸ் உட்பட ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. குறிப்பாக, தலைக்குந்தாவிலிருந்து, ஊட்டி சேரிங்கிராஸ் வரையுள்ள சாலையின் இருபுறம் வாகனங்கள் நிறுத்தப்படுவது வாடிக்கையாகிவிட்டது.பிங்கர்போஸ்ட் சாலையில் அதிகளவில் கனரக வாகனங்களும் நிறுத்தப்படுகிறது. இச்சாலையில், இரு புறத்தில் நிறுத்தப்படும் வாகனத்தால் பாதசாரிகள் சாலையில் நடக்க முடியாமல் அவதி அடைகின்றனர். வாகன விபத்துகள் அடிக்கடி நடக்கிறது. மக்கள் கூறுகையில்,'ஊட்டி- தலைக்குந்தாசாலையில், போலீசார் ஆய்வு செய்து,வாகனங்கள் நிறுத்தும் நபர்களுக்கு அபராதம்விதிக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை