மேலும் செய்திகள்
மோட்சராகினி பேராலய 187 வது ஆண்டு விழா துவக்கம்
04-Aug-2025
குன்னூர்; குன்னூர் பாய்ஸ் கம்பெனி வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை திருத்தல திருவிழா கொடியேற்றம் நடந்தது. குன்னுார் பாய்ஸ் கம்பெனி வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில், புனித ஆரோக்கிய அன்னையின் பிறந்த நாள் திருவிழா துவங்கியது. கேட்டில் பவுண்ட் பகுதியில் இருந்து கொடியை ஜெபத்துடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. ஊட்டி மறை மாவட்ட தலைமை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ் மாதா கொடியை ஏற்றி வைத்தார். வரும் 7ம் தேதி வரை நவநாள், திருப்பலி, மறையுரை நடக்கிறது. 8ம் தேதி அன்னையின் பிறந்த நாள் விழாவில், ஆடம்பர சிறப்பு திருப்பலி ஊட்டி மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் நடக்கிறது. தொடர்ந்து அன்பின் விருந்து, ஆடம்பர தேர்பவனி ஆகியவை நடக்கிறது. ஏற்பாடுகளை பங்குதந்தை ஆரோக்கியராஜ், உதவி பங்கு தந்தை கிளமென்ட், துணை தலைவர் சகாயராஜ், செயலாளர் ரிச்சர்டு மற்றும் பங்கு அருட்பணியாளர்கள், பங்கு பேரவையினர், அன்பியங்கள் செய்து வருகின்றனர்.
04-Aug-2025