உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வேணுகோபால கிருஷ்ணர் கோவில் பயிற்சி வகுப்புகள் துவக்கம்

வேணுகோபால கிருஷ்ணர் கோவில் பயிற்சி வகுப்புகள் துவக்கம்

குன்னுார்; குன்னூர் வேணுகோபால சுவாமி கோவிலில், தேவாரம், திருவாசகம் பயிற்சி வகுப்புகள் துவங்கியது.குன்னூர் கிராம பகுதி களில் பீசலு அறக்கட்டளை சார்பில், மாணவ, மாணவியருக்கு நற்பண்போடு கூடிய ஒழுக்க நெறி, தேவாரம், திருவாசகம் மற்றும் சித்தர்களின் பாடல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக குன்னூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள வேணுகோபால கிருஷ்ணர் கோவிலில், குழந்தைகளுக்கு முதல்முறையாக தேவாரம் திருவாசகம் மற்றும் சித்தர் பாடல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. திருவிளக்கு பூஜை, கிருஷ்ணருக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.கோவில் பூசாரி பிரபாத் குமார் பூஜைகளை மேற்கொண்டார். அறக்கட்டளை நிறுவனர் ஷாலினி முரளி தரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி