மேலும் செய்திகள்
கிருஷ்ணர் கோவிலில் உறியடி உற்சவம்
6 hour(s) ago
தொடரும் மழை: அபாய மரக்கிளைகள் அகற்றம்
6 hour(s) ago
பாலக்காட்டில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம்
6 hour(s) ago
மாநில எல்லையில் சேதமடைந்துள்ள நெடுஞ்சாலைநுழைவு கட்டணம் வசூலித்தும் பராமரிப்பு இல்லைகூடலுார்: தமிழக –கேரளா எல்லையான, கீழ்நாடுகாணி சாலை சேதமடைந்து வருவதால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். கூடலுார் நாடுகாணியிலிருந்து, கேரளா மாநிலம் நிலம்பூர் சாலை பிரிந்து செல்கிறது. இச்சாலை, தமிழகம்,கேரளா, கர்நாடகா இடையே வாகன போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடமாக உள்ளது. கேரளாவிலிருந்து நீலகிரிக்கு வரும் வாகனங்களுக்கு, நாடுகாணி சோதனை சாவடியில், நுழைவு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இந்நிலையில், நாடுகாணி முதல் கீழ்நாடுகாணி வரையிலான, 6 கி.மீ.. சாலை பராமரிப்பின்றி பல இடங்களில் சேதமடைந்து காணப்பட்டது. தொடர்ந்து, கடந்த, 2022ல் 2.25 கி.மீ., துார சாலையை, 4.25 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு மீதமுள்ள, 3.75 கி.மீ., சாலை, 6.25 கோடி ரூபாயில் சீரமைக்கப்பட்டது. இந்நிலையில், சீரமைக்கப்பட்ட பகுதி பராமரிப்பின்றி பல இடங்கள் சேதமடைந்துள்ளன. வாகனங்கள் இயக்க சிரமம் ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த பகுதிகளை சீரமைக்க நடவடிக்கை இல்லாததால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். கீழ் நாடுகாணியை சேர்ந்த சமூக ஆர்வலர் ரசாக் கூறுகையில்,‘‘மாநில எல்லையான கீழ்நாடுகாணி; நாடுகாணி இடைப்பட்ட, 6 கி.மீ., சாலையை சீரமைப்பதில் தரமில்லை. இதனால் சாலை பல இடங்களில் சேதமடைந்துள்ளது. சாலையில் நுழைவு கட்டணம் வசூல் செய்யும், மாவட்ட நிர்வாகமும் இதனை கண்டு கொள்வதில்லை. வாகனங்களை இயக்க சிரமப்பட்டு வருகிறோம். எனவே, சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்து, உடனடியாக தரமாக சீரமைக்க வேண்டும். தாமதப்படுத்தினால் போராட்டம் நடத்தப்படும்,’ என்றார். நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் பிரகாஷ் கூறுகையில்,‘‘ தமிழக– கேரள எல்லையில் உள்ள சேதமான நெடுஞ்சாலை பகுதிகள், கடந்த ஆண்டு சாலை சீரமைக்கப்பட்டது. அதில், சில இடங்களில் இயற்கை சீற்றம் காரணமாக, ‘இன்டர்லாக்’ கற்கள் பதிக்கப்பட்ட இடங்கள் சேதமடைந்துள்ளன. இவைகளை ஆய்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இப்பகுதிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.
--–– பஸ், லாரி : 90.00 சிறிய லாரி: 60.00 டாக்சி: 60.00 ஜீப்: 30.00 ஆட்டோ: 15.00 பைக்:10:00
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago