மேலும் செய்திகள்
வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு
22-Oct-2024
கோத்தகிரி; கோத்தகிரி வட்டத்தில், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ், கலெக்டர் லட்சுமி பவ்யா, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.கோத்தகிரி பகுதிக்கு வந்த மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா, தாலுகா அலுவலகத்தில், 24 பயனாளிகளுக்கு, 17.48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.நடுஹட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கட்டப்பட்டு அரசு துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு பொருட்களின் இருப்புகளை ஆய்வு செய்தார். காலை உணவு திட்டம் மற்றும் மதிய உணவு வழங்கும் அட்டவணையை காட்சிப்படுத்துமாறு, தலைமை ஆசிரியரிடம் அறிவுறுத்தி, மாணவர்களுடன் கலந்துரையாடினார். மேலும், பள்ளி வளாகத்தில், 10.95 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட உள்ள சமையல் கூட இடத்தை பார்வையிட்டார்.தொடர்ந்து, கட்டபெட்டு பகுதியில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ், 9 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சமுதாயக்கூட கட்டுமான பணி, எம்.ஜி.ஆர்., நகரில் கனவு இல்ல திட்டத்தின் கீழ், தலா 3.50 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் எட்டு வீடுகளை ஆய்வு செய்தார்.கஸ்துாரி பாய் நகர் -காவிலோரை இடையே, 2.2 கி.மீ., பிரதம மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தில் மொத்தம், 2.72 கோடி மதிப்பில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார்.மேலும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கோத்தகிரி கிளையை பார்வையிட்டு, மகளிர் சுய உதவிக் குழு கடன், விவசாய கடன், நகை கடன் மற்றும் கல்வி கடன் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். தேனாடு அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு, குழந்தைகளின் மருத்துவம் குறித்து கேட்டறிந்தார்.ஆய்வின் போது, குன்னுார் சார் ஆட்சியர் சங்கீதா, சுகாதாரத்துறை இணை இயக்குனர் நாகபுஷ்பராணி, மகளிர் திட்ட இயக்குனர் காசிநாதன் உட்பட பலர் உடன் இருந்தனர்.
22-Oct-2024