உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மலை ரயிலை வழிமறித்த காட்டு யானை

மலை ரயிலை வழிமறித்த காட்டு யானை

குன்னுார்; நீலகிரி மாவட்டம், குன்னுார்- மேட்டுப்பாளையம் இடையே உள்ள வனப்பகுதிகளில், தற்போது காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளது. அதில் ஒற்றை காட்டு யானை, மேட்டுப்பாளையம், குன்னுார் இடையே மரப்பாலம் -வடுக தோட்டம் மலை ரயில் பாதை பகுதியில் முகாமிட்டுள்ளது.நேற்று காலை, 7:10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு புறப்பட்ட மலை ரயில், காலை, 9:30 மணிக்கு வடுக தோட்டம் பகுதிக்கு வந்த போது யானை வழிமறித்தது. உடனடியாக நிறுத்தப்பட்டது.தொடர்ந்து, ஹாரன் சப்தம் எழுப்பி யானை விரட்ட ரயில்வே ஊழியர்கள் முயற்சித்தனர். எனினும் ரயிலை நோக்கி யானை ஓடி வந்த யானை, திடீரென மலை ஏறியது. மீண்டும் ஹாரன் சப்தம் எழுப்ப அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது.இந்த சம்பவத்தால், ரயிலில் வந்த சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனர். பலரும் 'வீடியோ' மற்றும் புகைப்படம் எடுத்தனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 10 நிமிடம் தாமதமாக, குன்னுார் நோக்கி மலை ரயில் பாதிப்பின்றி சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை