மேலும் செய்திகள்
ஆக்ரோஷமாக விரட்டிய யானை; நுாலிழையில் தப்பிய பயணி
08-Sep-2025
கூடலுார்; கூடலுார், கோத்தர்வயல் பகுதியில் நள்ளிரவில் முகாமிட்டு வரும் காட்டு யானைகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கூடலுார் பகுதியில், வனத்தை ஒட்டிய கிராமங்களில் இரவு நேரங்களில் வந்து சென்ற காட்டு யானைகள், தற்போது நகரை ஒட்டிய தேவர்சோலை சாலை, மேல் கூடலுார், மைசூரு தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து செல்ல துவங்கி உள்ளன. இதனால், மக்கள் இரவு நேரங்களில், அச்சத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம், நள்ளிரவு, கோத்தர்வயல் குடியிருப்பு பகுதியில் இரண்டு காட்டு யானைகள், நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தியது. மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வன ஊழியர்கள் அப் பகுதிக்கு சென்று பட்டாசு வெடித்து காட்டு யானைகளை விரட்டி, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மக்கள் கூறுகையில், 'நகரை ஒட்டி அமைந்துள்ள எங்கள் குடியிருப்பு பகுதியில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இப் பகுதியில் இரவில் காட்டு யானைகள் முகாமிட்டு வருவதால், அவசர தேவைக்கு கூட மக்கள் வெளியே சென்று வர முடியாத நிலையில் உள்ளனர். எனவே, காட்டு யானைகள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
08-Sep-2025