உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அரசு பள்ளியில் கானுயிர் வார விழா; வன வளத்தை பாதுகாக்க உறுதியேற்பு

அரசு பள்ளியில் கானுயிர் வார விழா; வன வளத்தை பாதுகாக்க உறுதியேற்பு

கோத்தகிரி; கோத்தகிரி கன்னேரிமுக்கு அரசு உயர்நிலைப் பள்ளியில், சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி மையம் சார்பில் கானுயிர் வார விழா நடந்தது. தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் அரவிந்தன் தலைமை வகித்து, 'கானுயிர் காப்போம்' பிரசார துண்டு பிரசுரம் வினியோகித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி மைய கள அலுவலர் குமாரவேலு பேசுகையில், ''மனிதனுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் அவசியமாக கருதப்படும் காற்று, நீர் ஆகியவை உணவு பொருட்கள் உள்ளிட்ட, தேவைகளை அளவில்லாமல் வழங்கி வருகிறது. இன்றைய சூழலில், வளங்களும், வன உயிரினங்களும் மனிதனால் அழிக்கப்பட்டு வருவது, எதிர்கால சந்ததியருக்கு வாழ்வாதார பிரச்னைகளை உருவாக்கும் என்பதால், வன பலத்தை பாதுகாப்பது அவசர அவசியம்,'' என்றார். இயற்கை விவசாயி ராமதாஸ், 'விஷமில்லா காய்கறிகள் விளைவிப்பது, வீட்டு தோட்டம் அமைப்பது' குறித்து விளக்கம் அளித்தார். தொடர்ந்து வனவளம் காப்பது குறித்து, மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஆசிரியர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை