உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நிழற்குடையில் விதிமீறி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் ; அகற்ற நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?

நிழற்குடையில் விதிமீறி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் ; அகற்ற நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?

ஊட்டி; 'ஊட்டி நகரில் அவல நிலையில் உள்ள நிழற்குடைகளை நகராட்சி நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு சீரமைக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.ஊட்டி நகரில் மத்திய பஸ் ஸ்டாண்ட், ஏ.டி.சி., சேரிங்கிராஸ், தாவரவியல் பூங்கா, கமர்சியல், ஸ்பென்ஷர் உள்ளிட்ட சாலைகள் முக்கிய சாலைகளாக உள்ளன. இவற்றை உள்ளூர் மக்கள்,சுற்றுலா பயணியர் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். பொதுமக்களின் வசதிக்காக மத்திய பஸ் ஸ்டாண்ட் வெளிபுறம், ஏ.டி.சி., சேரிங்கிராஸ், பிங்கர் போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் பயன்படுத்த நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இதனை நகராட்சி நிர்வாகம் பராமரிக்க வேண்டும். அதனால், பல நிழற்குடைகள் பராமரிக்கப்படாமல் காணப்படுகிறது.

ஆங்காங்கே குப்பை குவியல்

அதில், பல நிழல்குடைக்குள் அமர போதிய அளவில் இருக்கை வசதி இல்லை. அமைக்கப்பட்ட இருக்கைகளும் உடைந்துள்ளது. பயணிகள் கால் கடுக்க நிற்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. நிழல்குடைக்குள் ஆங்காங்கே குப்பை கழிவுகள் சிதறி கிடக்கிறது. பகல் நேரங்களில் குடிகாரர்கள் சிலர் மது அருந்தி கொண்டு நிழல் குடையை ஆக்கிரமித்து போதையில் படுத்து உறங்குகின்றனர். அங்கு வரும் சுற்றுலா பயணியர் வெளியேற வேண்டிய நிலை உள்ளது. மேலும், அப்பகுதிகளில் நகராட்சி நிர்வாகத்தின் விதிகளை மீறி பல்வேறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அவல நிலையில் காணப்படுகிறது. சுற்றுலா நகரின் அவலம் குறித்து, உள்ளூர் பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். நகராட்சியின் அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் சுற்றுலா நகரின் நிலை மோசமாகி வருகிறது. எனவே, ஊட்டி நகரில் பராமரிப்பில்லாத நிழற்குடைகளை துாய்மையாக வைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ