உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கருணை இல்லையென்றால் உலகம் இருண்டு விடும்: முன்னாள் தலைமை செயலர் இறையன்பு பேச்சு

கருணை இல்லையென்றால் உலகம் இருண்டு விடும்: முன்னாள் தலைமை செயலர் இறையன்பு பேச்சு

ஊட்டி : ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் புத்தக திருவிழா நடந்து வருகிறது. நேற்று நடந்த நிகழ்ச்சியில், முன்னாள் அரசு தலைமை செயலர் இறையன்பு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியதாவது: இன்று நான் உங்களிடம், 'அன்பும்,கருணையும்' என்ற தலைப்பில் பேசுகிறேன். அன்பும், கருணையும் அதிகமாக தேவைப்படும் துறை மருத்துவ துறை. இன்னும் சொல்லப்போனால் சில நேரங்களில் அன்பும், கருணையும் மட்டுமல்ல அருளும் தேவைப்படும் துறையாக இந்த துறை உள்ளது. தெரிந்தவர்களிடமும், வேண்டியவர்களிடமும் காட்டுவது அன்பு; தெரியாதவர்களிடம் காட்டுவது கருணை; சந்தித்திராதவர்களிடம் காட்டுவது தான் அருள். இந்த மூன்றையும் செய்கிற துறையாக மருத்துவ துறை உள்ளது. அன்பும், கருணையும் என்ற தலைப்பு பேசுவதற்கு ஒரு காரணம் உண்டு. அதாவது மக்கள் சுயநலமாக மாறி கொண்டிருக்கின்றனர். சொந்த வீட்டிலேயே பாகப்பிரிவினை ஏற்படுகிற போது தான், அண்ணன் தம்பிக்கு இடையே எவ்வளவு அன்பு இதுவரை இருந்திருக்கிறது என்பதை அறிய முடியும். ஒவ்வொரு பெற்றோரும், 'நன்றாக படி; நல்லபணிக்கு செல்; நிறைய சம்பாதித்து வசதியாக வாழ்ந்தால் தான் சமுதாயத்தில் மதிப்புடன் இருக்கலாம்,' என்று பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்கின்றனர். எந்த பெற்றோரும் அன்பாக இரு; கருணை இரு என்று சொல்லி கொடுத்ததாக தெரியவில்லை.அன்பு இல்லாத சமூகத்தில், மற்றவை எல்லாம் இருந்தால் ஏதாவது பயனிருக்குமா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். அதனால் தான் அன்பும், கருணையும் என்ற தலைப்பில் பேசலாம் என்று முடிவெடுத்தேன். இந்த உலகம் அன்பு என்கின்ற ஒற்றை இழையால் சுற்றி கொண்டிருக்கிறது. கருணை என்ற ஒற்றை இழையால் சுழன்று கொண்டிருக்கிறது. இவை இரண்டும் இல்லாவிட்டால் உலகம் இருண்டு போய்விடும் என்பதை மானுடம் அறிய வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா, மருத்து கல்லுாரி முதல்வர் கீதாஞ்சலி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை