உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நகைக்காக பெண் கொடூர கொலை

நகைக்காக பெண் கொடூர கொலை

பந்தலூர்: நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே வீரப்பன் காலனியை சேர்ந்தவர் முகமது. தேவர்சோலை அருகே பாடந்துறையில் தனியார் பள்ளியில் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மைமூனா, 55. முகமது நேற்று முன்தினம் வேலை முடிந்து, மாலை வீடு திரும்பினார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, சமையல் அறையில் மைமூனா கழுத்து அறுபட்ட நிலையில் சடலமாக கிடந்துஉள்ளார். நெலாக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மைமூனா அணிந்திருந்த, 6 சவரன் நகைகள் மாயமாகி இருந்தது. நகைக்காக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை