பாலக்காடு அருகே வீட்டினுள் துாக்கிட்டு பெண் தற்கொலை
பாலக்காடு; பாலக்காடு அருகே, வீட்டினுள் துாக்கிட்டு பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஆலத்தூர் தோணிப்பாடம் பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பவரின் மனைவி நேகா, 25. இவர், நேற்று காலை வீட்டினுள் படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்ட கணவர், ஆலத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், நேகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அதேநேரத்தில், மகள் தற்கொலை செய்வதற்கு காரணம் கணவர் பிரதீப் என்றும், அவர் கொடுமைப்படுத்தியதாக, நேகாவின் பெற்றோர் சுப்ரமணியன், ஜெயந்தி குற்றம் சாட்டியுள்ளனர். அவர்களின் புகாரின் அடிப்படையில் ஆலத்தூர், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.