பார்வை குறைபாடு உள்ளோருக்கான செஸ் போட்டியில் -சாதித்த பெண்
பந்தலுார்; கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கான தேசிய அளவிலான செஸ் போட்டி நடந்தது. அதில், 15 மாநிலங்களை சேர்ந்த, 40 பேர் பங்கேற்று விளையாடினர். முதல், 10 இடங்களை பிடிப்பவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். அந்த போட்டியில், பந்தலுார்அருகே எருமாடு பகுதியை சேர்ந்த அன்பரசி என்பவர் ஒன்பதாவது இடத்தை பெற்று வெற்றி பெற்றார். இவர் ஏற்கனவே தேசிய அளவிலான போட்டியில் இரண்டு தங்கபதக்கங்கள்; சிறந்த பெண் விளையாட்டு வீரர்களுக்கான, 4- பதக்கங்கள்; தேசிய அளவிலான, 13- போட்டிகளிலும், மாநிலம் மற்றும் மாவட்ட அளவிலான, 15 போட்டிகளிலும் பங்கேற்று சாதித்துள்ளார். வெற்றி பெற்ற அன்பரசிக்கு, பந்தலுார் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த சதுரங்க விளையாட்டு வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.