மேலும் செய்திகள்
குடிநீர் தட்டுப்பாட்டால்2 இடங்களில் மறியல்
27-Mar-2025
காலி குடங்களோடு ரோடு மறியல்
28-Mar-2025
ஊட்டி; ஊட்டியில் குடிநீர் வினியோகம் தடைப்பட்டதால் மக்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். ஊட்டி நகராட்சி, 30 வது வார்டு பாம்பே கேசிலில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிக்கு பார்சன்ஸ்வேலி பகுதியிலிருந்து கொண்டுவரப்படும் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக சரிவர தண்ணீர் வினியோகம் இல்லாததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குடிநீர் பிரச்னை குறித்து மக்கள் வார்டு கவுன்சிலர் மூலம் நகராட்சிக்கு புகார் தெரிவித்தனர். நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கடந்த இரண்டு வாரங்களாக தண்ணீர் வினியோகம் தடைப்பதாக மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.இந்நிலையில், நேற்று காலை அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ பகுதிக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன், நகராட்சி அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். சமாதானமடையாத மக்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 'உடனடியாக தண்ணீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என, நகராட்சி அலுவலர்கள் உறுதியளித்ததால் மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். பொதுமக்கள் கூறுகையில்,'கடந்த சில மாதங்களாக குடிநீர் பிரச்னை இருந்து வருகிறது. இரு வாரங்களாக குடிநீர் முற்றிலுமாக தடைப்பட்டது. வேறு வழி இன்றி மறியல் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு சீராக குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்
27-Mar-2025
28-Mar-2025