உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / முளைப்பாரி ஊர்வலத்தில் பெண்கள் பங்கேற்பு

முளைப்பாரி ஊர்வலத்தில் பெண்கள் பங்கேற்பு

கோத்தகிரி; கோத்தகிரி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நேற்று முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.கோத்தகிரி பஜார் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், நாளை மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.இதனை ஒட்டி, கணபதி மற்றும் மாரியம்மன் கோவில்களில் நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்காக, நேற்று முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.முக்கிய வீதிகள் வழியாக நடந்த இந்த ஊர்வலம், கோவிலை அடைந்தது. இதில், நுாற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ