உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இரும்பு விழுந்து தொழிலாளி காயம்

இரும்பு விழுந்து தொழிலாளி காயம்

குன்னுார்; குன்னுார் மலை ரயில் நிலையத்தில் பரா மரிப்பு பணிகள் நடந்து வரும் நிலையில் தண்டவாள இரும்பு விழுந்து தொழிலாளி படுகாயமடைந்தார்.குன்னுார் மலை ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.நேற்று மாலை, 5:00 மணி அளவில், மேற்பகுதியில் இருந்த பழைய தண்டவாள இரும்பை கீழே இறக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக, கயிறு அறுந்ததில், கீழே பணியாற்றிக் கொண்டிருந்த, வட மாநில தொழிலாளி ஆனந்தன், 28, என்பவரின் மீது விழுந்ததில் படுகாய மடைந்தார். குன்னுார் அரசு மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவ கல்ல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலாளர்கள் கூறுகையில், 'ரயில் நிலைய பராமரிப்பு பணியின் போது, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை