மேலும் செய்திகள்
பந்தலுார் அருகே சமுதாய சுகாதார விழிப்புணர்வு
31-Mar-2025
பந்தலுார், ; பந்தலுார் அருகே உப்பட்டியில் வனத்துறை, கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், நெல்லியாளம் நகராட்சி, போலீசார் இணைந்து உலக புவி தின விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். ஒருங்கிணைப்பாளர் அஜித் வரவேற்றார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொதுச்செயலாளர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்து, 'உலக புவி தினம் மற்றும் இயற்கையை பாதுகாப்பதில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பங்களிப்பு,' குறித்து பேசினார். வனச்சரகர் சஞ்சீவி, மின்வாரிய செயற்பொறியாளர் முத்துக்குமார், சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி மைய கள அலுவலர் குமாரவேலு, தேவாலா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரோஸ்லின் ஆகியோர், 'இயற்கை அழிவால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் மரங்கள் நடுதல் மற்றும் வனங்களை பாதுகாத்தல், இயற்கை அழிவு தடுத்தல் குறித்தும், இயற்கை அழிவால் ஏற்படும் பாதிப்புகள்,' குறித்தும் விளக்கி பேசினர். தொடர்ந்து, மரக்கன்றுகளுடன் உப்பட்டி ஐ.டி.ஐ., மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஐ.டி.ஐ. வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சியில் உதவி மின் பொறியாளர் கார்த்திக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி மையம் சார்பில் புவி தின விழிப்புணர்வு வாசகம் வெளியிடப்பட்டது. நகராட்சி பணியாளர் கார்த்திக் நன்றி கூறினார்.
31-Mar-2025