மேலும் செய்திகள்
குற்றங்களை மறைக்கும் போலீசால் புலம்புது சிட்டி
24-Jun-2025
குன்னுார்; குன்னுார்- மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மலை ரயிலில், 73 வயதுடைய 'எக்ஸ் கிளாஸ்' நீராவி இன்ஜின், குறைந்தளவிலனா டீசலில் இயங்கும் வகையில் நவீனப்படுத்தப்பட்டு, சோதனை ஓட்டம் நடந்தது.ஆங்கிலேயர் ஆட்சியில், 1899ல், நீலகிரிக்கு மலை ரயில் போக்குவரத்து துவங்கியது. நுாற்றாண்டுகளாக நிலக்கரியால் இயங்கி வந்த, 'எக்ஸ்கிளாஸ்' நீராவி இன்ஜின்கள், கடந்த, 2002-ல் 'பர்னஸ்' ஆயிலில், இயங்கும் வகையில் மாற்றப்பட்டன.பர்னஸ் ஆயில் பயன்படுத்த மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்ததால், குன்னுார் பணிமனையில், சீனியர் டெக்னீஷியன் மாணிக்கம் தலைமையில், கடந்த 2022-- 24 வரை இன்ஜின்கள் டீசலுக்கு மாற்றப்பட்டன. புது பொலிவுக்கு மாற்றம்
இதில், 1952ம் ஆண்டு முதல் இயங்கி வரும், '37392' எண் கொண்ட 'எக்ஸ் கிளாஸ்' நீராவி இன்ஜின் பராமரிப்பு பணிகளுக்காக திருச்சி பொன்மலை பணிமனையில், கடந்த, 6 மாதங்களுக்கு முன்பு கொண்டு சென்று, புது பொலிவுபடுத்தப்பட்டது. நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுாருக்கு இரு பெட்டிகள் இணைக்கப்பட்டு, சோதனை ஓட்டம் நடந்தது.விரைவில் சுற்றுலா பயணிகளுக்காக இயக்கப்பட உள்ளது.ஏற்பாடுகளை செய்த கோவை ஐ.எஸ்.ஏ., இன்ஜினியர்ஸ் நிறுவன பொறியாளர் சம்பத் கூறுகையில்,''நவீனப்படுத்தப்பட்ட இந்த இன்ஜினில் பைலட் பர்னர், நாசில், டீசல் சப்ளை மெயின் குழாய்கள் ஒரே லைனாக மாற்றப்பட்டுள்ளன. டீசல் பயன்படுத்தும் அளவு குறையும். பைலட் டிரைவர்கள் எளிதாக இயக்க எலக்ட்ரானிக் முறை மாற்றப்பட்டுள்ளது,'' என்றார்.
24-Jun-2025