உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / உடலில் பைக் ஏற்றி சாதனை; இளைஞருக்கு பாராட்டு

உடலில் பைக் ஏற்றி சாதனை; இளைஞருக்கு பாராட்டு

பந்தலூர்; உடலில் பைக் மற்றும் காரை ஏற்றி சாதனை புரிந்த, கின்னஸ் சாதனையாளருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பந்தலுார் அருகே சேரங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்,34. தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இவர் ஏற்கனவே உடல் மீது, 150 புல்லட்களை ஏற்றி கின்னஸ் சாதனையாளர் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.இந்நிலையில், பந்தலுாரில் நடந்த பொங்கல் விழா நிகழ்ச்சியில் தனது உடல் மீது, 12 புல்லட்கள் மற்றும் ஒரு காரை ஏற்றி சாதனை புரிந்தார். இவருக்கு பொங்கல் விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ