உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பெண்களிடம் அத்துமீறல்; இளைஞர் கைது

பெண்களிடம் அத்துமீறல்; இளைஞர் கைது

பந்தலுார்; பந்தலுார் அருகே தேவாலா பகுதியை சேர்ந்தவர் ரிசால்,25. இவர் நேற்று முன்தினம் செத்தக்கொல்லி பகுதியில் வீட்டு கதவுகளை தட்டி உள்ளார். அப்போது, கதவை திறக்கும் பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி இளைஞர்கள், ரிசாலை பிடித்து கட்டி வைத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தேவாலா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு இளைஞர் மீது வழக்கு பதிவு செய்து அன்று இரவு கைது செய்தனர். போலீசார் கூறுகையில், 'இவர் ஏற்கனவே கரிய சோலை என்ற இடத்தில் சாலையோரம் நிறுத்தி இருந்த அரசு பஸ்சை நள்ளிரவில் ஓட்டி சென்று நடுவழியில் நிறுத்தி சென்றார்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை