உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / லாரி- – வேன் மோதல்: இளம்பெண் பலி

லாரி- – வேன் மோதல்: இளம்பெண் பலி

பாலக்காடு: கோழிக்கோடு மாவூர் அரையன்கோடு பகுதியைச் சேர்ந்த சசிகுமார் – சினி தம்பதியின் இளைய மகள் தேவிகா, 21. இவர் நேற்று முன்தினம் மாலை, பாலக்காட்டில் உள்ள வங்கியில் பணியாற்றி வரும் தனது மற்றொரு சகோதரி ஆதித்யாவிற்கு பிரிட்ஜ் ஒப்படைத்துவிட்டு, அவரது சகோதரி அருணிமா, சகோதரரின் மகன் அபிஜித் ஆகியோர் பிக்கப் வேனில் மீண்டும் கோழிக்கோடு நோக்கிப் பயணித்துள்ளனர். பாலக்காடு - செர்புளச்சேரி சாலையில் உள்ள, மங்கலாம்குன்னு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரியும் இவர்களது வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த மூவரும் கோழிக்கோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி தேவிகா நேற்று அதிகாலை உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !