உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தங்க மோதிரம், மூக்குத்தி திருடிய இளைஞருக்கு காப்பு

தங்க மோதிரம், மூக்குத்தி திருடிய இளைஞருக்கு காப்பு

குன்னுார் ; கொலக்கம்பையில், தங்க மோதிரம், மூக்குத்தி உள்ளிட்ட நகைகளை திருடிய, கூலி தொழிலாளியை கொலக்கம்பை போலீசார் கைது செய்தனர். குன்னுார் கொலக்கம்பை அருகே, பவானி எஸ்டேட் பகுதியில், லதா என்பவர் பணிக்கு சென்று இருந்த நிலையில், கடந்த ஏப்., மாதம் 9ம் தேதி, இவரின் வீட்டின் பூட்டு உடைத்து மோதிரம், மூக்குத்தி, வெள்ளி கொலுசு உட்பட, 2 பவுன் வரையிலான நகைகள் திருட்டு போயின. இது தொடர்பான, புகாரின் பேரில் கொலக்கம்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், சந்தேகத்திற்கு இடமான வகையில் நடமாடி வந்த பக்காசூரன் ஆர்.எப்., லைன் பகுதியை சேர்ந்த கூலி வேலை செய்து வரும் சூர்யாவை,24, விசாரணை நடத்தியதில், இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து, அவரை கைது செய்து, குன்னூர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கிளை சிறையில் போலீசார் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி