மேலும் செய்திகள்
பஸ்சில் இருந்து விழுந்த கல்லுாரி மாணவி பலி
11-Feb-2025
பெரம்பலுார்:பெரம்பலுார் அருகே சாராய ஊறல் போட்ட முதியவரை, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.பெரம்பலுார் மாவட்டம், எம்.கே., நல்லுார் கிராம பகுதியில், சட்ட விரோதமாக சாராயம் மற்றும் சாராய ஊறல் போடுவதாக பெரம்பலுார் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.எஸ்.ஐ., வினோத்கண்ணன் தலைமையிலான போலீசார், திடீர் சோதனையில் ஈடுபட்ட போது, அதே ஊரை சேர்ந்து கண்ணன், 54, மேட்டு காலிங்கராயநல்லுார் ஏரி குட்டையில் சட்ட விரோதமாக சாராயம் மற்றும் சாராய ஊறல் போட்டதை கண்டுபிடித்தனர். அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து, 5 லிட்டர் நாட்டு சாராயம், சாராய ஊறல் 30 லிட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
11-Feb-2025