வாசகர்கள் கருத்துகள் ( 1 )
திருட்டு திராவுடனின் இன்னொரு டெக்னிக். அடுத்தவன் செலவழிச்சால் இவன் கணக்கெழுதி லவட்டிருவான்.
மேலும் செய்திகள்
கண்மாய் உள்ளேயே சாலை அமைப்பு
29-Aug-2024
பெரம்பலுார் : பெரம்பலுார் மாவட்டம், கோனேரிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட அங்காளம்மன் நகர், முத்து நகர், மாரியம்மன் நகர் பகுதியில், தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர், வீட்டு மனைகளை அமைத்துள்ளனர். அதை விற்பனை செய்வதற்காக, அப்பகுதியில் பாதை அமைத்து, ஓரடுக்கு மெட்டல் சாலை போடப்பட்டுள்ளது. இந்த பணியை ரியல் எஸ்டேட் நிறுவனம் மேற்கொண்டது.ஆனால், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், 2020 - 2021ம் நிதியாண்டில், அங்காளம்மன் நகர் மெயின் சாலை முதல் குறுக்கு சாலை வரை மெட்டல் சாலை, 16.50 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. மாரியம்மன் நகர் பிரதான சாலை மற்றும் குறுக்கு சாலையை ஓரடுக்கு மெட்டல் சாலையாக, 9.97 லட்சம் ரூபாய் மதிப்பிலும், முத்து நகர் மெயின் ரோடு முதல் குறுக்கு சாலை வரை, 6.35 லட்சம் ரூபாய் மதிப்பிலும் சாலை அமைக்கப்பட்டதாக சம்பந்தப்பட்ட துறையினரால் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. தனியார் நிறுவனத்தினர் போட்ட ஓரடுக்கு மெட்டல் சாலையை, கோனேரி பாளையம் ஊராட்சி சார்பில் போட்டதாக, பெரம்பலுார் முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவழகன் உள்ளிட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சிலர் போலி கணக்கு காட்டி அரசு பணத்தை கையாடல் செய்துள்ளதாக தற்போது போலீசாருக்கு புகார் சென்றது.இதுகுறித்து, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த நிதி முறைகேட்டில் ஈடுபட்ட ஊழல் அதிகாரிகள் அச்சத்தில் உள்ளனர்.
திருட்டு திராவுடனின் இன்னொரு டெக்னிக். அடுத்தவன் செலவழிச்சால் இவன் கணக்கெழுதி லவட்டிருவான்.
29-Aug-2024