வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இதை எதுக்கும் உதவாத உதவாநிதி கிட்ட கேளுங்க. வயிறு எறியிற மாதிரி பதில் சொல்வாரு.
பெரம்பலுார்; எளம்பலுார் மலையின் பாதியை காணோம் என்றும், இதெல்லாம் கேட்க யார் வருவார் என்றும் பிரபல தமிழ் சினிமா இயக்குனர் மோகன் ஜி வீடியோ வெளியிட்டு ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.தமிழ் சினிமாவில், 'பழைய வண்ணாரபேட்டை, திரவுபதி, பகாசூரன்' போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் மோகன் ஜி. இவர், தன் முகநுால் பக்கத்தில் நேற்று வீடியோ ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார். அதில், அவர் பேசியிருப்பதாவது: சேலத்தில் இருந்து பெரம்பலுார் வழியாக அரியலுார் சென்று கொண்டிருந்தேன். அப்போது, பெரம்பலுார் அருகே எளம்பலுார் என்னும் இடத்தில் இயற்கை தந்த அருட்கொடையான மலையை பாதி அளவு கறச்சு வச்சுருங்காங்க.இதெல்லாம் எங்க போய் முடிய போகுது. அடுத்த தலைமுறைக்கு இயற்கையை கொஞ்சமாவது கொண்டு போய் சேர்க்க வேண்டாமா? பார்க்கும் போது வயித்தெரிச்சலா இருந்தது. அதனால தான் வீடியோ எடுத்து போட்டேன். இதெல்லாம் கேட்க யார் வரப்போரா?மேலும், அங்கு செயல்படும் குவாரி அனுமதி பெற்று இயங்குகிறதோ அனுமதி இல்லாமல் இயங்குகிறதோ? ஆனால், இயற்கையை அழிப்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.எனவே, கனிமவளத்துறை அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு இயற்கையை பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் . இவ்வாறு அவர் பேசியுள்ளார்.இவரது வீடியோ பெரம்பலுார் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதை எதுக்கும் உதவாத உதவாநிதி கிட்ட கேளுங்க. வயிறு எறியிற மாதிரி பதில் சொல்வாரு.