மேலும் செய்திகள்
மூதாட்டி மரணம்: போலீஸ் விசாரணை
21-May-2025
வாய்க்காலில் விழுந்த செக்யூரிட்டி சாவு
08-May-2025
Captain ஆகும் Shubman Gill
24-May-2025
பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்டம், திருவளக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் மகன் நிக்கேஷ், 12; ஏழாம் வகுப்பு படித்து வந்தார். இவரது பாட்டி சரஸ்வதி, வயல் பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார்.நிக்கேஷ் சித்தி சத்தியாவின் மகள் தன்ஷிகா, 9, மகன் ஆகாஷ், 8, ஆகியோ ருடன் அப்பகுதி குட்டை யின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, தன்ஷிகாவின் செருப்பு குட்டைக்குள் விழுந்தது.குட்டையில் இறங்கிய நிக்கேஷ், செருப்பை எடுக்கச் சென்றபோது நீரில் மூழ்கினார். ஆகாஷ், சென்று சரஸ்வதியிடம் தெரிவித்தார். அக்கம் பக்கத்தினர் குட்டைக்குள் இறங்கி நிக்கேசை மீட்டு, சிறுவாச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே நிக்கேஷ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பாடாலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
21-May-2025
08-May-2025
24-May-2025