ஆடியோ ரிலீஸால் பா.ஜ.,வில் பரபரப்பு
பெரம்பலுார்,:பா.ஜ., மாவட்ட தலைவர் மீது அவதுாறு பேசும் ஆடியோ பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலுார் அ.தி.மு.க., வேட்பாளர், பா.ஜ., நிர்வாகிகளுக்கு பூத் செலவுக்கு வழங்க கொடுத்த பணத்தை, அரியலுார் மாவட்ட பா.ஜ., தலைவர் டாக்டர் பரமேஸ்வரி என்பவர், பூத் கமிட்டி செயலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு தரவில்லை. இதைத் தொடர்ந்து, பா.ஜ., மீனவரணி முன்னாள் மாவட்ட தலைவர் மணிகண்டன் என்பவர், பா.ஜ., நிர்வாகிகள், 'வாட்ஸாப்' குழுவில் ஆடியோ பதிவிட்டார். அதில், 'மாவட்ட தலைவர் பரமேஸ்வரி, பூத் கமிட்டி செலவு தொகையை கூட தரவில்லை; நீங்கள், ஏன் மாவட்ட தலைவராக இருக்கிறீர்; ராஜினாமா செய்யுங்கள்' என குறிப்பிட்டுள்ளார். அவர் பேசிய ஆடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பரவி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.