உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / மின் இணைப்புக்கு லஞ்சம்: உதவி பொறியாளர் கைது

மின் இணைப்புக்கு லஞ்சம்: உதவி பொறியாளர் கைது

பெரம்பலுார் : மின் இணைப்பு வழங்க, 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, உதவி மின் பொறியாளர் ரகுராமன், 54, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.பெரம்பலுார் மாவட்டம், காடூரை சேர்ந்தவர் பழனிவேல், 31. இவர், புதிதாக கட்டும் வீட்டுக்கு, தற்காலிக மின் இணைப்பு வழங்க, துங்கபுரம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் விண்ணபித்தார். புதிய மின் இணைப்பு வழங்க, தனக்கு, 2,000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என, உதவி மின் பொறியாளர் ரகுராமன், பழனிவேலுவிடம் கேட்டார். லஞ்சம் தர விருப்பமில்லாத பழனிவேல், ஊழல் தடுப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் அறிவுரைப்படி, இன்று மதியம், ரகுராமனிடம், பழனிவேலு பணத்தை வழங்கினார். மறைந்திருந்த போலீசார், ரகுராமனை கையும் களவுமாக கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Aam Aathmi (Mango Man)
ஆக 21, 2026 03:23

லஞ்சம் கொடுக்காமல் யாரும் மின் இணைப்பு வாங்குவது சாத்தியமில்லை ..


HoneyBee
ஆக 20, 2026 21:43

அப்ப ஆயிரம் கோடிகள் அடிச்சிட்டு வெளியே இருக்கும் கூட்டத்தை ஏன் விட்டு வைத்துள்ளனர் இந்த சோசப்பு ஆட்சி


பாரதி
ஆக 20, 2026 21:28

கொள்ளையடிக்க வந்த வெள்ளையன் இந்த நாட்டை குட்டிச்சுவர் ஆக்கு ஆக்குவதற்காக... ஒரு கல்வித்துறையை ஏற்படுத்தி, மெக்காலே என்ற ஒரு திருட்டு வெள்ளை அதிகாரி மூலம் சதி செய்து ஒரு திருடனாக்கும் பாடத்திட்டத்தை ஏற்படுத்தினான் சுதந்திரத்திற்கு பிறகும் கூட அதே சாக்கடைகள் தான் தொடர்கின்றன அவைகள் இப்படிப்பட்ட கொள்ளையர்களைத்தான் உருவாக்கும் வேறு என்ன செய்யும்... இந்தக் கல்வியை தான் மாங்கா மடையர்கள் போட்டி போட்டுக் கொண்டு வளர்க்கிறார்கள்... அறிவு கெட்டவர்கள்... சாக்கடை தலையர்கள்...


பைரவன்
ஆக 20, 2026 20:13

ஆனால் இந்த சிறிய மீன்கள் மட்டுமே வசமாக சிக்கிச் சின்னா பின்னாமாகி விடுகின்றன.


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 20, 2026 21:06

சின்னா பின்னம் ஒண்ணும் கிடையாதுங்க. அடுத்த வாரம் என்கொயரின்னு ஒரு பெரிய பொறியாளர் வருவாருங்க. அவரை கவனிச்சுட்டாக்க, இவரிடம் மன்னிப்பு கடிதம் வாங்கிக்கிட்டு இவரை திரும்பவும் பணியில் சேர சொல்லிடுவாங்க. ஏற்கனவே ஆள் பற்றாக்குறைன்னு காரணமும் சொல்லிடுவாங்க.


Jagan
ஆக 20, 2026 19:57

மூஞ்சியை பார்த்தாலே தெரியுது கொழுக்கும் கூட்டம் என்று


God bless all.
ஆக 20, 2026 19:38

இந்த வயதில் இந்த அவமானம் அவசியமா? உன் நேர்மையான சம்பாத்தியத்தில் உன்னால் ஒரு கண்ணியமான வாழ்க்கையை வாழ முடியாதா? மனசாட்சிக்கும் கடவுளுக்கும் அஞ்சுகிறவர்கள், ஒருபோதும் ஊழலில் ஈடுபட மாட்டார்கள்.


ஜெகதீசன்
ஆக 20, 2026 18:55

தண்ணியடிக்குற செலவுக்கு இவனுகளுக்கு இப்படி லஞ்சம் எனும் அதிகார பிச்சை தேவையிருக்கு திருந்தாத ஜென்மங்கள்.


V RAMASWAMY
ஆக 20, 2026 19:09

Absolutely right, getting more and more devilish corrupt persons from various Departments indicate their urge to seek more and more corrupt money from public needing their services which have to be done free - are definitely to get their endless desire for liquor fulfilled. Though they are getting caught almost everyday, it is only an icberg and thousands are in the list. Severe punishment including dismissal and penalty should work.


Sethu Thangavelu
ஆக 20, 2026 18:48

மிகக் சிறந்த பதிவு


sengalipuram
ஆக 20, 2026 18:41

அது எப்படி லஞ்சம் வாங்கற மூஞ்சி எல்லாமே திருடன் மாதிரி இருக்கு ?


தியாகு
ஆக 20, 2026 20:40

ஹி...ஹி...ஹி...என்னங்க நீங்க, கட்டுமர பட்டறையில் ஊழல் லஞ்சம் வாங்க பயின்றவர்கள் மூஞ்சி எப்படி இருக்கும்னு உங்களுக்கு தெரியாதா? அப்பாவியா இருக்கீங்களே.


Govi
ஆக 20, 2026 18:39

2000ம் தான இத போயி ........


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி