மேலும் செய்திகள்
கழிவு நீர் பிரச்னை இரு வீட்டார் மோதல்
09-Mar-2025
பெரம்பலுார்:சொத்து தகராறில் மகனை கடப்பாறையால் குத்திக்கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.பெரம்பலுார் மாவட்டம், பசும்பலுார் கிராமத்தை சேர்ந்தவர் ராயப்பன், 55. இவருக்கு, பார்வதி, மகேஸ்வரி என, இரு மனைவியர் உள்ளனர். இவர், இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால், ராயப்பனின் தந்தை கோவிந்தசாமி, ராயப்பனின் முதல் மனைவி மகனான முத்துக்குமார், 28, என்பவருக்கு தன் நிலத்தை எழுதி வைத்தார்.சில ஆண்டுகளுக்கு முன், ராயப்பன், தன் தந்தையிடம் நைசாக பேசி அவருக்கு சொந்தமான வீட்டை, தன் இரண்டாவது மனைவியின் மகளுக்கு எழுதி வாங்கினார். இருப்பினும், அந்த வீட்டில் முத்துக்குமார் குடியிருந்தார். வீட்டை காலி செய்யுமாறு ராயப்பன் கூறியும், முத்துக்குமார் கேட்கவில்லை.கடந்த, 10ம் தேதி இரவு ராயப்பன், அவரது இரண்டாவது மனைவி மகேஸ்வரி, உறவினர்கள் வேல்முருகன், ராஜா, பாப்பாத்தி, பச்சையம்மாள் ஆகியோர் சேர்ந்து முத்துக்குமார் வீட்டுக்கு சென்று வீட்டை காலி செய்யுமாறு கூறினர்.அவர் மறுத்ததால், ராயப்பன் உள்ளிட்ட ஆறு பேரும் சேர்ந்து, கடப்பாறையால் முத்துக்குமாரை சரமாரியாக அடித்தனர். படுகாயமடைந்த அவரை, அவரது மனைவி கவிதா மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துக்குமார் இறந்தார்.வி.களத்துார் போலீசார் ராயப்பனை கைது செய்தனர். மற்ற ஐந்து பேரை தேடி வருகின்றனர்.முத்துக்குமாரின் மனைவி கவிதா, பிறந்து 15 நாட்களே ஆன தன் பெண் குழந்தையுடன், பெரம்பலுார் மாவட்ட போலீஸ் எஸ்.பி., ஆதர்ஷ்பசேராவை நேற்று மாலை நேரில் சந்தித்து, வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யக்கோரி மனு கொடுத்தார்.
09-Mar-2025