உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / ரூ.19.76 லட்சம் மோசடி; சென்னை நபர் கைது

ரூ.19.76 லட்சம் மோசடி; சென்னை நபர் கைது

பெரம்பலுார்; அரியலுாரை சேர்ந்த சுந்தர், 43, என்பவரை, மொபைல் போன் வாயிலாக தொடர்பு கொண்ட ஒருவர், 'ஆன்லைன் டிரேடிங்' எனப்படும் இணையதளம் வாயிலாக பங்கு சந்தை போன்றவற்றில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என கூறினார். அதை உண்மை என நம்பி, வங்கி கணக்கு மூலம், 19.76 லட்சம் ரூபாயை, அந்த நபர் கூறிய எண்களில் சுந்தர் செலுத்தினார். ஆனால், அவர் கூறியபடி லாபம் கிடைக்கவில்லை. இதையடுத்து, அந்த நபர் மீது அரியலுார் இணையதள குற்றப்பிரிவு போலீசில், சுந்தர் புகார் அளித்தார். உடனடியாக, அந்த நபரின் வங்கி கணக்கில் இருந்த, 8.66 லட்சம் ரூபாயை போலீஸ் அதிகாரிகள் முடக்கினர்; தொடர்ந்து விசாரணை செய்தனர்.அதில், சென்னை, வேளச்சேரியை சேர்ந்த சக்திவேல், 36, என்பவர் தான் மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. அந்த நபரின் கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா, உத்தர பிரதேசம் மற்றும் கேரளா மாநிலங்களின் வங்கிகளில் துவங்கியிருந்த கணக்குகளையும் போலீசார் முடக்கினர்.இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார், சென்னை சென்று, சக்திவேலை கைது செய்து, நேற்று முன்தினம் அரியலுார் அழைத்து வந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை