கணினி பயிற்சிக்கு சென்ற சிறுமி மாயம்
தலைவாசல், பெரம்பலுார் மாவட்டம் வேப்பந்தட்டை, நுாத்தப்பூரை சேர்ந்த, 16 வயது சிறுமி, 10ம் வகுப்பை பாதியில் நிறுத்திவிட்டு, கணினி பயிற்சி மையத்துக்கு சென்று வந்தார். இவரது தந்தை, தலைவாசல் அருகே வேப்பம்பூண்டி யில் ஓட்டல் நடத்துகிறார். கடந்த ஏப்., 30ல், வீரகனுாருக்கு கணினி பயிற்சி மையத்துக்கு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் காணாததால், மாணவியின் பெற்றோர் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, வீரகனுார் போலீசார், மாணவியை தேடுகின்றனர்.