உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / மாயமான மாணவியர் மீட்பு

மாயமான மாணவியர் மீட்பு

பெரம்பலுார்: பெரம்பலுார் அருகே, காணாமல் போன மாணவியர் இருவரை போலீசார் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பெரம்பலுார் மாவட்டம், வெங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும், 14 வயது மாணவியர் இருவர், நேற்று (அக்.,21) காலை வழக்கம் போல் பள்ளிக்கு புத்தகப்பையுடன் வந்துள்ளனர். காலை, 8:30 மணியளவில் தங்கள் புத்தகப்பையை வகுப்பறைக்குள் வைத்து விட்டு வெளியே சென்றனர். அவர்கள் மீண்டும் பள்ளிக்கு வரததால், பெற்றோர் மற்றும் அரும்பாவூர் போலீசாருக்கு ஆசிரியர்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில், மாணவியர் இருவரும் பஸ்சில் ஏறி, பெரம்பலுார் மற்றும் திருச்சிக்கு சென்றதும், ஒரு மாணவியின் உறவினர் வீட்டில் அவர்கள் இருப்பதும் தெரியவந்தது. போலீசார் அவர்களை மீட்டு, குழந்தைகள் நல குழுமத்தில் ஒப்படைத்தனர். அதன்பின், அறிவுரை கூறி பெற்றோரிடம் மாணவியர் அனுப்பி வைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ