உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / ரூ.3 ஆயிரம் லஞ்சம்: பெரம்பலூரில் கோவில் செயல் அலுவலர் கைது

ரூ.3 ஆயிரம் லஞ்சம்: பெரம்பலூரில் கோவில் செயல் அலுவலர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கோவிலை புதுப்பிக்க ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு பரிந்துரை கடிதம் அனுப்ப ரூ. 3,000 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கோவில் செயல் அலுவலர் கோவிந்தராஜ் என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.பெரம்பலூர் அருகே செங்குணம் கிரமத்தில் மிகவும் பழமைவாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலை புதுப்பிப்பதற்காக, கோயில் செயல் அலுவலரான மயிலாடுதுறையைச் சேர்ந்த கோவிந்தராஜை, செங்குணம் கிராமத்தைச் சேர்ந்த அறங்காவல் குழு நிர்வாகி சிவா அணுகினார். ஆனால், இதற்கான பரிந்துரை கடிதத்தை சென்னையில் உள்ள ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் அலுவலகத்திற்கு அனுப்ப, கோவிந்தராஜ் 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு உள்ளார்.ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத சிவா, பெரம்பலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.தொடர்ந்து, பெரம்பலூர் பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மதன கோபால சுவமி கோவில் அலுவலகத்தில் கோவிந்தராஜை சந்தித்த சிவா, லஞ்ச ஒழிப்பு போலீசார் பரிந்துரையின்படி லஞ்சப்பணத்தை கொடுத்தார்.அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஹேமசித்ரா தலைமையிலான போலீசார் கோவிந்தராஜை கையும் களவுமாக பிடித்தனர்.தொடர்ந்து, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் உமாவை நேரில் வரவழைத்து அவர் முன்னிலையில் கோவிந்த ராஜிடம் விசாரணை நடத்தினர். பிறகு அவரை கைது செய்து அழைத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 07, 2025 10:10

இந்து அறநிலையத்துறை என்ற ஒன்றை கழித்தே தீர வேண்டிய கட்டாயம் இப்போது உள்ளது. அரசு அதிகாரிகள் என்ற கயவர்கள் கூடாரமாக இந்து அறநிலையத்துறை உள்ளது. கோவில் அர்ச்சகர்கள் கூட திருடர்களாக இந்த இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் என்று சொல்லிக்கொள்ளும் திருடர்கள் ஆக மாற்றி விட்டார்கள். விஷேச காலங்களில் அல்லது கூட்டம் அதிகமாக உள்ள நாட்களில் அல்லது இயல்பாகவே பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ள கோயில்களில் காலையில் சிறிது நேரம் மட்டுமே அர்ச்சனை பூ தட்டு டிக்கெட் கள் விற்பார்கள் சிறிது நேரம் சென்றவுடன் அர்ச்சகர்கள் இடம் இருந்து இந்த அர்ச்சனை டிக்கெட்கள் மீண்டும் எவ்வித சேதாரமும் இன்றி கவுண்டருக்கு வந்து விற்ற டிக்கெட்டையே மீண்டும் விற்பனை செய்கிறார்கள். இந்த திருட்டு தனத்தை ஒழிக்க வேண்டும். எனக்கு ஒரு கோவிலில் ஒரு விஷேச தினத்தன்று சென்றிருந்த போது சில்லறை கேட்டார் இல்லை என்று சொன்னதற்கு சில்லறை 4 ரூபாய் தள்ளுபடி செய்து கேட்ட அர்ச்சனை டிக்கெட் கொடுத்தார் கோவில் அதிகாரி புண்ணியவான்.


Kasimani Baskaran
மார் 07, 2025 07:12

கோவில்களில் இருந்து இந்து அறநிலையத்துறை கயவர்களை வெளியேறவில்லை என்றால் நாம் கும்பிடும் கடவுள் கூட நம்மை காப்பாற்ற மாட்டார்.


B MAADHAVAN
மார் 07, 2025 00:14

ஐயா, கோவில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி கொடுப்பதற்கு லஞ்சம் வாங்கும் அறங்கெட்டத் துறை, ஊர் மக்கள் சேர்ந்து செலவு செய்து நடத்தும் கோவில் கும்பாபிஷேகத்திற்கு ஆகும் செலவையும் அறங்கெட்டத்துறை செலவு செய்தது போல கணக்கு காட்டவும் வாய்ப்பு உள்ளது. என்னென்ன செலவு வரவு போன்ற விவரங்களை உண்மையாக வெளிப்படையாக சமூக வலைத் தளங்களில் அல்லது கோவிலுக்கு நல்லது செய்கிறோம் என்று சொல்லும் அந்த துறை அதன் வலைதளங்களில் வெளியிட்டு நல்லது செய்யலாமே...


M S RAGHUNATHAN
மார் 06, 2025 21:42

முதலில் இவன்.ஹிண்டுவா அல்லது Crypto வா என்று விசாரிக்க வேண்டும்.


Anantharaman Srinivasan
மார் 06, 2025 21:38

அரசு அலுவலங்களில் அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஆளும் கட்சி மாவட்டசெயலாளர்களும் அந்தந்ததுறை மந்திரிகளும் மாதாமாதம் வசூல் செய்து தர வேண்டுமென நிர்பந்தம் கொடுப்பதால் தான் நாங்கள் லஞ்சம் கேட்கிறோம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.


Kovandakurichy Govindaraj
மார் 06, 2025 23:48

100 % உண்மை . இதே காரணத்தினால் தான் சில வருடங்களுக்கு முன்பு இதே மதனகோபாலசாமி கோவில் செயல் அலுவலராக இருந்த மணி என்பவர் லஞ்ச புகாரில் சிக்கி சிறைக்கு சென்றார் . பணம் வாங்கி தர சொன்ன அரசியல்வாதி தப்பித்து கொண்டார் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை