தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில் நட்சத்திர கலை விழா இன்று துவக்கம்
பெரம்பலுார்; பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில் 3 நாட்கள் நடக்கும் நட்சத்திர கலை விழா இன்று துவங்குகிறது. பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் கூறியதாவது: பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் கலை விழா இன்று (13ம் தேதி) மாலை 6:00 மணிக்கு துவங்குகிறது. விழாவில், தனலட்சுமி சீனிவாசன் தொண்டு மற்றும் கல்வி அறக்கட்டளை விருதுகள் வழங்கப்படும். இதில், அரசின் முன்னாள் செயலர், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அபூர்வாவிற்கு 'சேஞ்ச் மேக்கர்' விருதும், திருச்சி ஜமால் முகமது குழும நிறுவனங்களின் தாளாளர் காஜா நஜுமுதீனுக்கு 'சிறந்த சமூக மற்றும் சமூக சாதனையாளர்' விருதும், கவிஞர் மற்றும் எழுத்தாளருமான இளம்பிறைக்கு 'இன்ஸ்பிரேஷன் ஐகான்' விருதும், டெல்லி ப்ரைன்ட்ரீ கேம்பஸ் நிர்வாக இயக்குனரும், அல்சாஸினோ லைப் சயின்சஸ் இயக்குனருமான சரண்யா சூரிய பிரகாசம் மற்றும் ஆஸ்திரேலியா டி.எவி. சிஸ்டம்ஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி நித்தேஷ் புஷ்பராஜ் ஆகியோருக்கு 'சிறந்த முன்னாள் மாணவர்' விருதும் வழங்கப்படுகிறது.தொடர்ந்து, நடிகை கிர்த்தி ஷெட்டி மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.நாளை (14ம் தேதி) 2ம் நாள் விழாவில் சினிமா பாடகர்கள் அசல் கோலார், பூஜா வெங்கட் மற்றும் சாம் விஷால் ஆகியோர் கலந்து கொள்ளும் ஆடல், பாடல் இன்னிசை நடக்கிறது. 15ம் தேதி நடக்கும் நிறைவு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை மமிதா பைஜூ ஆகியோர் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.